கொரோனா விதிமுறைகளை மீறி, Aylmer இல் உள்ள கடவுளின் சபை தேவாலயத்தில் இரண்டு ரொறன்ரோ காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக Aylmer காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த தேவாலயத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் ஒன்று கூடியுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர்.
இதன்போது,18 பேர் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செல்வதை காவல்துறையினர் அவதானித்தனர்.
பின்னர் நான்கு பேருக்கு எதிராக மீளத் திறத்தல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, Aylmer காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.