ரொறன்ரோவில் கடந்த ஆண்டு வெறுப்புணர்வு குற்றங்கள் 51 வீதம் அதிகரித்துள்ளதாக, ரொறன்ரோ காவல்துறை தெரிவித்துள்ளது.
வெறுப்புணர்வு குற்றங்கள் தொடர்பான ஆண்டு புள்ளிவிபர அளிக்கையை ரொறன்ரோ காவல்துறை நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2019ஆம் ஆண்டில் 139 வெறுப்புணர்வு குற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் யூத, கறுப்பு, ஒருபாலுறவு, மற்றும் ஆசிய சமூக குழுக்களே இதனால் பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், காவல்துறை அறிக்கை கூறுகிறது.