கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவிலேயே அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதோடு மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதற்கமைய 3 இலட்சத்து 54 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் மேலும் 2 ஆயிரத்து 806 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதற்கிணங்க இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 36 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 116 கொரோனா மரணங்களும் இதுவரையில் பதிவாகியுள்ளன.
டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் வைத்தியசாலைகளில் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.