கர்நாடகாவில் நாளை இரவு தொடக்கம், 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்ட போதும், பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாநிலத்தில் 2 வாரங்கள் ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் நாளை இரவு 9 மணி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது