18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 வீதத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முக்கியமான மைல் கல்லை எட்டி விட்டதாக பீல் பிராந்தியம், அறிவித்துள்ளது.
இந்த முக்கியமான அடைவு தொடர்பாக பீல் பிராந்திய அதிகாரிகள் இணையத் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்போது 5 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், பீல் பிராந்தியம் தெரிவித்துள்ளது.
மாபெரும் தடுப்பூசித் திட்டத்தின் இந்த முன்னேற்றத்துக்கு, பல தனிநபர்கள் மற்றும் பங்காளர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.