மேல் மாகாணத்தில் சினோபார்ம் தடுப்பூசியை பொதுமக்களுக்கு ஏற்றுவதற்காக 40 இற்கும் அதிகமான தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சினோபார்ம் தடுப்பூசி 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
இதற்காக கொழும்பு களுத்துறை மாவட்டங்களில் தலா 10 தடுப்பூசி மையங்களும், கம்பகா மாவட்டத்தில் 15 தடுப்பூசி மையங்களும், கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் மேலதிகமாக 5 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு நாளொன்றுக்கு 25 ஆயிரம் பேருக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை ஏற்ற முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டலில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு ஏனைய மாவட்டங்களுக்கும் இந்த தடுப்பூசித் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.