தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் இன்று இடம்பெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கு அமைய குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்ட நிலையில், பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே குறித்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.