சிறிலங்காவில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்குகளாக அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்றினால், நாளாந்தம் 2500 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் சுகாதார அதிகாரிகள் திணறி வருகின்ற நிலையில், அடுத்து வரும் நாட்களில், நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாளாந்த தொற்று எண்ணிக்கை 8 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்கள், உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அவசிய காரணங்களுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வருமாறும், சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.





