கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு மாகாண ஆளுநர் தடைவிதித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கு, நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜஹம்பத் நேற்று அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், மாகாணத்தில் உள்ள நகரங்களில், மாலை 6 மணிக்குப் பின்னர் வர்த்தக நிலையங்களை மூடுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அவசர காரணங்கள் தவிர நகரங்களுக்குள் மாலை 6 மணிக்குப் பின்னர் மக்கள் நுழைவதை கட்டுப்படுத்துமாறும், பாதுகாப்புத் தரப்பினரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாவட்ட எல்லைகளில் வீதித் தடைகளை அமைத்து, அவசியமற்ற போக்குவரத்துகளை உடனடியாக தடுக்குமாறும் அவர் சிறிலங்கா பாதுகாப்பு படைகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.





