முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகிறது.
2007ஆம் ஆண்டு வன்னியில் சிறிலங்கா படைகள் ஆரம்பித்த, ஆக்கிரமிப்புப் போர், 2009ஆம் ஆண்டு 18ஆம் நாள், பாரிய இனப்படுகொலைகளுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இறுதி ஏழு நாட்களில், முள்ளிவாய்க்கால் மண்ணியில் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், சிறிலங்கா படைகளின் குண்டு வீச்சுகளில் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
சிறிலங்காவின் வரலாற்றில் மிக மோசமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள், போர்க்குற்றங்கள் இந்தக் காலகட்டத்தில் அரங்கேற்றப்பட்டன.
ஈழத் தமிழரின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காக சிறிலங்கா படைகள், படுகொலைகளை நிகழ்த்தி 12 ஆண்டுகளை நிறைவடைந்துள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





