அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி மீதான பொது நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அமைச்சர் அனித்தா ஆனந்த கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர், பிரதமர் ஜஸ்டின் ரூடோ, எதிர்க்கட்சித்தலைவர் எரின் ஓ டூல், என்.டி.பி.தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோர் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியையே செலுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியானது, குருதி உறைதலுக்கு வழி வகுக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களை சுமந்து கொண்டிருந்தமையால் அத்தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஹெல்த் கனடா பாதுகாப்பான மற்றும் பயனுள்ளது என்று குறிப்பிட்டு அந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை அளித்துள்ளதால் சமஷ்டி அரசாங்கம் தொடர்ந்தும் அத்தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
இந்நிலையிலேயே அமைச்சர் அனித்தா ஆனந்த இவ்வாறு தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.