அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை உள்ளெடுப்பவர்களுக்கு குருதி உறைவு நிலைமைகள் அதிகரித்து வருகின்றமையால் ஒன்ராரியோவில் அந்தத் தடுப்பூசி இனி வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியோ பொதுசுகாதாரத்துறையில் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் டேவிட் வில்லியம்ஸ் அந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
ஒன்ராரியோவில் இதுவரையில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் அளவே அதிகளவானவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டவர்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இந்த தடுப்பூசி வழங்குவதை முற்றாக கைவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.