இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் பாலஸ்தீன போராளிகளுக்கும் இடையே காசா பகுதியில் நடந்து வரும் மோதல்கள், முழு அளவிலான போராக மாறலாம் என்று ஐ.நா அச்சம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகணைகளை கடந்த 38 மணி நேரத்தில் ஹமாஸ் போராளிகள் ஏவியுள்ளனர்.
அதற்கு பதிலடி தரும் வகையில் நேற்றும் இன்றும், காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம், நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வரும் மோதல்களில் குறைந்தபட்சம் 13 சிறுவர்கள் உள்ளிட்ட 43 பாலஸ்தீனர்களும், ஆறு இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மோதல்கள் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.