பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தை அடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள ரன்ஜ் ஆற்றிலும், இறந்தவர்களின் சடலங்கள் மிதக்கத் தொடங்கியுள்ளன.
உத்தர பிரதேச எல்லையில் உள்ள பன்னா மாவட்டத்தின் நந்தன்பூர் கிராமத்தின் ரன்ஜ் ஆற்றில், இறந்தவர்களின் சடலங்கள் வீசப்படுவதாக, அங்குள்ள மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இரு மாநிலங்களின் எல்லையில் ஆறு பாய்கின்ற நிலையில், உத்தர பிரதேசத்தில் இறந்தவர்களின் உடல்களை அதில் வீசி உள்ளனர்.
இந்த ஆற்றில் இதுவரை, ஆறு உடல்கள் வரை மிதந்துள்ளன. அவை, கொரோனா பாதிப்பால் பலியானோர் உடல்களாக இருக்கலாம் என்பதால், கிராமத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது.