நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று காலமானார்.
80 வயதுடைய செந்தமிழன், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில், உடல்நலக்குறைவால் காலமானார் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தையார் செந்தமிழன் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமான் அவர்களுக்கும் , அவரது குடும்பத்திற்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறப்பட்டுள்ளது.