தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தினால் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் 24 மணிநேரத்தில், 1 இலட்சத்து 64 ஆயிரத்து 945 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், 33 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்து 65 ஆயிரத்து 035 ஆக அதிகரித்து உள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில், 303 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது.” என்றும் கூறப்பட்டு உள்ளது.