நடிகரும், உதவி இயக்குனருமான பவுண்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், போன்ற படங்களில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்திருந்த பவுண்ராஜ், இந்தப் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருந்தார்.
இவர் மதுரையில் தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், குட்டி ரமேஷ் என மிகவும் பிரபலமான நடிகர்கள், இயக்குனர்கள் பலரை தமிழ்த் திரையுலகம் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.