அதிதீவிர புயலாக உருமாறியுள்ள ‘டாக்டே’ புயல் இன்று குஜராத் கடல் பகுதியை அடையவுள்ளதாகவும், நாளை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டாக்டே புயல் குஜராத் கடல் பகுதியை அடையும்போது, அதிதீவிர புயலாக மாறி மணிக்கு 15 -175 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
ஆமதாபாத், சூரத், ஆனந்த், பாவ்நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில், கடல் சீற்றம் கடுமையாக இருக்கும். குடிசை வீடுகள் மற்றும் இதர குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் சேதம் ஏற்படலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த புயல் வலுப்பெற்றுள்ளதன் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோரபகுதிகளில் வசித்த 1.50 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.