ஈஸ்ட் யோர்க்கில் உள்ள தடுப்பூசி மையம், 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி நேற்று மாலை புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.
East York Town Centre இல் உள்ள, Thorncliffe Park Community Hub இல், இந்த தடுப்பூசி மையத்தை கிழக்கு ரொறன்ரோ சுகாதார பங்காளர்கள் நடத்தியுள்ளனர்.
கனடாவில் இவ்வாறான தடுப்பூசி சாதனை முதல்முறையாக படைக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி மையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் நின்று பைசர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.