அம்பாறை – பொத்துவில், உடும்பன்குளம், செல்வவெளி வயல் பகுதியில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளார்.
பொத்துவில்-15 களப்புக்கட்டையைச் சேர்ந்த குறித்த நபரின் சடலம், துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் சந்தேக நபர்கள் இருவரை பொத்துவில் காவல்துறையினர் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இன்னமும் வெளியாகவில்லை.