கனடாவில் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி விநியோகத்திற்கு படைத்தரப்பு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே கனடாவின் தேசிய தடுப்பூசி விநியோகத்திட்டத்தில் பங்கேற்றிருந்த படைத்தரப்பின் முன்னாள் அதிகாரிகள் விலகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சில பகுதிகளில் படைத்தரப்பு கொரோனா பாதுகாப்பு செயற்பாட்டில் பங்களிப்பினை வழங்குவதைப்போன்று தடுப்பூசி விநியோகத்திலும் பங்களிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இராணுவம் இந்த பணிகளில் ஈடுபடுவதற்கு தற்போதைய நிலையில் தயாராகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.