தமிழகத்தில் இன்று 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்து 98 ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல ஆண்களே அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும், 311 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்என்றும், இதையடுத்து வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளதாகவும், தமிழக சுகாதாரத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.