முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் நினைவேந்தலுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த உறவுகளுக்கு, இன்று வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு இன்று காலை சென்ற சிவாஜிலிங்கம் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்.
இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற பகுதியில் சிறிலங்கா படையினர், புலனாய்வாளர்கள், காவல்துறையினர் குவிக்கப்பட்டு, எவரும் நுழைய முடியாதபடி கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.