முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை அனுசரிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் செல்லும் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நாளை முற்பகல் 10.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அருகே நினைவேந்தல் நிகைழ்வை எளிமையாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை விதித்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் 7 காவல்துறை நிலையங்களின் சார்பில் 32 பேருக்கு எதிராக, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தடைகளை மீறி நினைவுகூரலுக்குச் செல்பவர்களை தடுக்கும் நோக்கில் சிறிலங்கா காவல்துறையினர், வீதித் தடைகளை ஏற்படுத்துவதற்காக, இரும்பு தடைகளை கொண்டு சென்று இறங்கியுள்ளனர்.
அத்துடன், முல்லைத்தீவு -பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் கப்பல் வீதி சந்தியில் சிறிலங்கா காவல்துறையினர் நிறுத்தப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.