சுமார் இரண்டு மாதங்களாக முடக்க நிலையில் உள்ள அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ஆயிரத்து 400க்கும் அதிகமானோருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கு நேற்று அங்கு 950 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் தொற்றாளர் எண்ணிக்கை 450 பேரினால் அதிகரித்துள்ளது.
வார இறுதியில் நடத்தப்பட்ட சட்டவிரோத ஒன்றுகூடல்களால் தான், தொற்றுப்பரவல் மோசமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிகளை மீறி நடந்து கொண்டதால் நூற்றுக்கணக்கானோருக்குக் தொற்று ஏற்பட்டுள்ளமை, தொடர்புத் தடங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு தீட்டப்பட்ட திட்டம், இதனால் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.