புர்கினோ பாசோவில், (Burkina Faso) இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில், ஐந்து படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று, இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டின் வடக்குப் பகுதியில், ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, இராணுவ வாகனமே தாக்குதலுக்கு உள்ளானது என்றும், இந்தச் சம்பவத்தில் ஒரு இராணுவ வீர்ர் காயமடைந்துள்ளார் என்றும், புர்கினோ பாசோ இராணுவம் கூறியுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து தரைப்படைகளும், வான்படையும் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்குவைடா மற்றும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் இங்கு தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இவ்வாறான தாக்குதல்களில் சுமார் இரண்டாயிரம் பேர் வரை இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்றும், தெரிவிக்கப்படுகிறது.