இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிடுவதற்கு இதுவரை அனுமதி கிடைக்காத நிலையில், நேற்று(10) நாடுகளில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈழத் தமிழ் கலைஞர்களின் படைப்பான “ஊழி” திரைப்படம் நேற்று(10) உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டடிருந்தன.
அதன்படி, விஷேடமாக நேற்றைய தினம் பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா மற்றும் பல இடங்களில் திரையரங்குகள் நிரம்பி வழிந்துள்ளன.
இலங்கையில் அனுமதி
இந்நிலையில், ஊழி திரைப்படத்தை இலங்கையில் மக்கள் பார்வையிட மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற போதும் படத்தின் வெளியீடு தொடர்பாக எந்த அறிவிப்பையும் வழங்க முடியாத சூழல் காணப்படுகிறது.
அத்தோடு, கருத்துச் சுதந்திரத்தை மதித்து, எமது கலைப்படைப்பினை இலங்கையில் வெளியிட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார்.