முக்கிய செய்திகள்

24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசிகள்

35

பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது கீச்சகப்பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்பதிவில், “பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் நேரத்தின் மதிப்பை அறிந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள குறிப்பிட்ட நாள் நேரம் ஆகியவற்றை மருத்துவமனைகள் பின்பற்ற தேவையில்லை.

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *