முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

901

அமெரிக்காவின் புதிய அதிபர் விதித்துள்ள சில நாட்டினருக்கான பயணத் தடை உத்தரவினால், இரட்டடைக் குடியுரிமை பெற்ற கனேடியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சில நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவுக்குள் நுளைவதை தற்காலிகமாக தடை செய்வதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அவ்வாறானா நாடுகளுடன் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள கனேடியர்களும் அமெரிக்காவுக்குள் நுளைய முடியாத நிலை ஏற்படும் என அஞ்சப்பட்டது.

எனினும் கனேடிய கடவுச் சீட்டுக்களை கொண்டுள்ள எவரும் அமெரிக்காவுக்குள் நுளைவதற்கு தடை விதிக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தினை தாம் பெற்றுக் கொண்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் அலுவலகம் அறிவித்துள்ளது.

நேற்ற பின்னிரவில் இந்த அறிவிப்பினை விடுத்துள்ள பிரதமர் அலுவலகம், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள எந்தவொருகனேடியரும் அமெரிக்காவினுள் நுளைவது தடுக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தினை அமெரிக்கா தமக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கனேடிய கடவுச் சீட்டுகளுடன் பயணிக்கும் கனேடியர் அனைவரும், ஒரே மாதிரியான வகையிலேயே அமெரிக்க நுளைவுச் சாவடிகளில் பார்க்கப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தினை அமெரிக்கா தமக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் தொடர்பாடல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஈரான், ஈராக், சூடான், சோமாலியா, சிரியா, யேமன், லிபியா ஆகிய நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுளைவதற்கு தற்காலிக தடையினை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், இந்த நாடுகளின் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள கனேடியர்களுக்கும் அது பொருந்தும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் முன்னர் தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை மேற்கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்தே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள கனேடியர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இந்த தடை உத்தரவினை அமெரிக்க இராஜாங்கத திணைக்களம் அறிவித்த வேளையில் இதற்கு பதில் கருத்துக்கள் எதனையும் முன்வைக்காத பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பயங்கரவாதம், போர் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக தப்பியோடுவோர் யாராக இருந்தாலும், அவர்களின் மத நம்பிக்கைகளுக்க அப்பாற்பட்டு அவர்களை வரவேற்க கனடா தற்போதும் தயாராக உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்த்ககது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *