முக்கிய செய்திகள்

32 வயதுடைய இளம் குடும்பத் தலைவரை 11 நாட்களாகக் காணவில்லை

195

வவுனியாவில் 32 வயதுடைய இளம் குடும்பத் தலைவர் ஒருவரை 11 நாட்களாகக் காணவில்லை என அவரது மனைவி வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா – சி ஜீ ஆர் பூங்கா வீதியில் வசிக்கும், 32 வயதான சௌந்தராஜா விஜயகுமார் என்பவரே காணாமல் போயுள்ளார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் நாள், பகல் 2.30 மணியளவில் தனது பழக் கடையில் இருந்து வீடு திரும்புவதாகக் கூறி, அங்கிருந்து வெளியேறிச் சென்றவர் இன்னமும் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் நண்பர்களின் வீடுகளிலும், அவர் இல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *