முக்கிய செய்திகள்

இன்றைதினம் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியின் முதற்தொகுதி

40

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியின் முதற்தொகுதி இன்றைதினம் கனடாவிற்கு வரவுள்ளதாக அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்தார்.

முதற்கட்டமாக சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா (Serum Institute of India) மற்றும் வெரிட்டி பார்மாசூட்டிகல்ஸ் (Verity Pharmaceuticals) ஆகியவற்றிலிருந்து ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஒன்பது இலட்சத்து 44ஆயிரத்து 600 தடுப்பூசிகள் இந்த வார இறுதிக்குள் தருவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை அடுத்தவாரமும் ஒன்பது இலட்சம் வரையிலான தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் கொரோனா கட்டுப்படுத்தும் பாதையில் பணிப்பதற்கு கனடா ஆரம்பித்துள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *