முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உலகின் மிக வலுவான இராணுவ பலத்தைக் கொண்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் சீனா

218

உலகின் மிக வலுவான இராணுவ பலத்தைக் கொண்டுள்ள நாடுகளில், சீனா முதலிடத்தில் உள்ளதாக, பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்டரி டைரக்ட் (Military Direct) வரிசைப்படுத்தியுள்ளது.

உலகின் மிகவலுவான இராணுவ பலம் கொண்டுள்ள நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அந்த வலைத்தளம்,  இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், இராணுவ வீரர்களின் எண்ணிக்கை, வான், கடல், தரை மற்றும் அணு ஆயுத வளங்கள், கருவிகளின் எடை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு, இறுதி இராணுவ வலிமைக் குறியீட்டைக் கணக்கிடப்பட்டுள்ளது.

புள்ளிகள் அடிப்படையில்,  100க்கு 82 புள்ளிகள் பெற்று, உலகின் வலிமையான இராணுவத்தை கொண்டுள்ள நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா, 74 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ரஷ்யா 69 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், இந்தியா 61 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், பிரான்ஸ் 58 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளன.

மிகப்பெரிய இராணுவ செலவினத்தைக் கொண்ட நாடுகளில் ஆண்டுக்கு 732 பில்லியன் அமெரிக்க டொலருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

எனினும், 261 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *