முக்கிய செய்திகள்

‘ஒன்ராரியோவில் மூன்று நாள் முடக்கல் நிலை; உடனடியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்’

51

ஒன்ராரியோவில் மூன்று நாள் முடக்கல் நிலைக்கு  உடனடியாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று Ontario’s science table  பணிப்பாளர் வைத்தியர் பீட்டர் ஜூனி (Peter Juni) வலியுறுத்தியுள்ளார்.

நாளொன்றுக்கான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500ஐ விடவும் அதிகமாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாகாணத்தின் நிலைமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயத்தில் தாமதமின்றிய தீர்மானங்களின் ஊடாகவே நிகழவிருக்கும் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

மூன்றாவது அலையை எதிர்க்கொள்வதாயின், இவ்விதமான முடிவுகள் அவசியமானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *