முக்கிய செய்திகள்

கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளை புதிய முறையில் அவதானிக்கவுள்ள காவல்துறை

21

கடவுச்சீட்டுக்கு  விண்ணப்பிப்பவர்களின்  சமூக ஊடக நடவடிக்கைகளை ஆராய்வதற்கு உத்தராகண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உத்தராகண்ட் காவல்துறை தலைவர், அசோக் குமார், சமூக ஊடக தளங்களில் பெருகிவரும் தவறான பயன்பாட்டை நிறுத்த கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் இணைய நடத்தை ஆராயப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை தேவை என்றும், அவர் கூறியுள்ளார்.

“கடவுச்சீட்டு சட்டத்தில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் எவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்படக்கூடாது என்று ஒரு விதி உள்ளது.

சமூக ஊடகங்களில் வளர்ந்து வரும் தவறான பயன்பாட்டை மட்டுப்படுத்தவும், பயனர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வலியுறுத்தவும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் அவசியம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *