முக்கிய செய்திகள்

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள்

29

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டுள்ளன.

ஏற்கனவே 8 விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில், மேலும் 3 விமானங்கள் இன்று புறப்பட்டுள்ளன. குறித்த விமானங்கள் இடையில் எங்கும் நிற்காமல் இந்தியா வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரக விமானப் படையின் டேங்கர் விமானம் உதவி செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 3 விமானங்கள் இணைய இருப்பது இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று பிரான்ஸிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *