முக்கிய செய்திகள்

புளொர் யோங் (Bloor-Yonge) சுரங்க ரயில் நிலையத்தில் சுத்தியல் தாக்குதல்

112

ரொறன்ரோவில், புளொர் யோங் (Bloor-Yonge) சுரங்க ரயில் நிலையத்தில்  நடத்தப்பட்ட சுத்தியல் தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 8.45 மணியளவில், புளொர் யோங் (Bloor-Yonge) சுரங்க ரயில் நிலையத்தில் சென்றவர்களை, சுத்தியலுடன் நின்ற ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அறிந்து, ரொறன்ரோ காவல்துறையினர் விரைந்து சென்று, சுத்தியலுடன் நின்ற நபரைக் கைது செய்துள்ளனர்.

அத்துடன் தாக்குதலில்  காயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *