முக்கிய செய்திகள்

போராட்டங்களில் ஈடுப்பட தீர்மானித்துள்ளமை தவறான செயற்பாடாகும்

121

73 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் கறுப்பு நிற ஆடையணிந்து போராட்டங்களில் ஈடுப்பட தீர்மானித்துள்ளமை தவறான செயற்பாடாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் சிறிலங்காவை பலவீனப்படுத்தும் வகையில் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர தினத்தன்று கறுப்பு ஆடையணிந்து போராட்டங்களில் ஈடுப்படுவது முற்றிலும் தவறான செயற்பாடாகும். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் இன,நல்லிணக்கத்தை வலுப்படுத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

சாதாரண தமிழ் மக்கள் தேசிய நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள்.பிரித்தானிய ஆட்சியில் இருந்து சிறிலங்கா சுதந்திரமடைவதற்கு தமிழ் தலைவர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *