முக்கிய செய்திகள்

2 ஆவது நாளாக அடையாள தொடர் போராட்டம்

69

தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்களின் நீட்சியாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் கனடிய மண்ணிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலாவது அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து 2 ஆவது நாளாக அடையாள தொடர் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ரொரண்டோவில் U.S. Consulate, 360 University Ave முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புக்கு நீதிகோரியும், சிறிலங்கா அரசாங்கத்தினை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்த பாதாகைகளையும் தாங்கியிருந்தனர்.

இதேவேளை நாளையதினமும் இதனை ஒத்த போராட்டமொன்று ஒண்டாரியோ சட்டசபையின் முன்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *