விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான ‘இருமுகன்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
குறிப்பாக விக்ரம் நடிப்பு, ஹாரிஸ் ஜெயராஜ் இசை நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.61.35 லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் ரஜினியின் ‘கபாலி’, விஜய்யின் ‘தெறி’ படங்களைத் தொடர்ந்து முதல் நாளில் அதிகம் வசூலித்த மூன்றாவது திரைப்படம் என்ற பெருமை ‘இருமுகனுக்கு’க் கிடைத்துள்ளது.
வரும் வாரம் ஓணம், பக்ரீத் என வரிசையாக பண்டிகை தினங்கள் வருவதால் ‘இருமுகன்’ படத்தின் வசூல் மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.