தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி ஜெகதீஸ்வரன் அனித்தா, கோலூன்றிப் பாய்தலில் புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டி பெரும் பாராட்டைப் பெற்றார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று நிறைவு பெற்ற 86ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளிலேயே அனித்தா புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டினார்.
20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.35 மீற்றர் தாவியதன் மூலம் அவர் புதிய இலங்கை சாதனைக்கு சொந்தக்காரரானார்.
அத்துடன் இந்த மூன்று நாள் போட்டிகளில் ஒரே ஒரு இலங்கை சாதனையை நிலைநாட்டிய பெருமையும் அனித்தாவை சாருகின்றது.
இதன் மூலம் இவ்வாண்டு நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் வலல்ல ஏ. ரட்நாயக்க மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஹர்ஷனி தர்மரட்னவினால் நிலைநாட்டிப்பட்ருந்த 3.34மீற்றர் என்ற இலங்கை சாதனையை அனித்தா முறியடித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.