பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதால் 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மரியா ஷரபோவா தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
மரியா ஷரபோவா இவர் ரஷியா நாட்டை சேர்ந்தவர். கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. அப்போது வீரர்களுக்கான ஊக்க மருந்து சோதனை செய்யப்பட்டது. இதில் ஷரபோவா மெல்டோனியம் எனப்படும் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதனால் ஷரபோவாவுக்கு 2 ஆண்டு தடையை சர்வதேச டென்னிஸ் சங்கம் விதித்தது.
இதனால் ஷரபோவா 2 ஆண்டு தடையை நீக்கவும், தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இன்று வெளியாகியுள்ள தீர்ப்பில் 2 ஆண்டிலிருந்து 15 மாதங்களாக குறைத்து, சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.