உலகின் சிறந்த கால்பந்து வீரர்களின் ஒருவரான போர்த்துகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஓய்வு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது, ரியல் மாட்ரிட் கிளப் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் 31 வயதான ரொனால்டோ.
மேலும், ஐந்து ஆண்டுகள்(2021) ரியல் மாட்ரிட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்காக ரொனால்டோவுக்கு 365,000 யூரோ அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரொனால்டோ கூறியதாவது, இது கண்டிப்பாக தனது கடைசி ஒப்பந்தமாக இருக்காது.
நான் தொடர்ந்து விளையாட அசைப்படுகிறேன். 41 வயது வரை நான் கண்டிப்பாக கால்பந்து விளையாடி சாதனைகள் படைப்பேன் என உறுதியளித்துள்ளார்.