இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதுதான் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் குவித்த அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் 2009-ல் மும்பையில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 726 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
2010-ல் கொழும்பில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 707 ரன்கள் குவித்தது. 2004-ல் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 705 ரன்களும், 1986-ம் ஆண்டு கான்பூரில் இலங்கை அணிக்கெதிராக 676 ரன்களும் எடுத்திருந்தது.