உலக கிரிக்கெட் அரங்கில் தற்போது கணிக்க முடியாத அணியாக பங்காதேஷ் அணி உருவெடுத்துள்ளதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மதுரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“பங்காதேஷ் அணி எப்போது எந்த நேரத்தில் அபாயகரமானதாக உருவெடுக்கும் என்பதை கணிக்க முடியாது. அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு டெஸ்ட் அங்கீகாரம் அளித்தது நல்ல அறிகுறி” என கூறினார்.