விஜய்சேதுபதி, மாதவன் இணைந்து நடித்துள்ள விக்ரம் வேதா திரப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
புஷ்கா் காயத்திாி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மாதவன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம் விக்ரம் வேதா. இப்படத்தின் பாடல்கள், டிரைலா், டீசா் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டு இரசிகா்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இப்படம் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் 450, கேரளாவில் 125, கா்நாடகாவில் 110 என உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2 மணி 27 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் வரலட்சுமி சரத்குமாா், ஷ்ரதா ஸ்ரீநாத் கதா நாயகிகளாக நடித்துள்ளனா். சாம் இசையமைத்துள்ளாா். ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாாித்துள்ளது.
ஆக்சன் திாில்லா் வடிவில் வெளிவர உள்ள இப்படம் ரசிகா்கள் மத்தியில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. வாி விதிப்பு, தமிழகத்தில் திரையரங்குகளில் செய்யப்பட்டுள்ள டிக்கெட் விலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களினால் இப்படம் எந்த அளவிலான வெற்றியை பெற உள்ளது என்ற எதிா்பாா்ப்பில் தி உள்ளனா்.