திருமணம் முடிந்து மூன்று நாட்களில் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லவுள்ளதால், தேன்நிலவுக்கெல்லாம் நேரமில்லை என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா மற்றும் நாகசைதன்யாஆகியோருக்கு இடையில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் மூலம் நட்பு உருவாகி, அது காலப்போக்கில் காதலாக மாறியது.
இந்த நிலையில் இருவரும் ஒக்ரோபர் 6ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். எனவே இது குறித்து ஆங்கில பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே சமந்தா மேற்கண்ட வாறு கூறியுள்ளார்.
மேலும் தற்பொழுது தான் அதிக படங்களில் ஒப்பந்தமாகியுள்ளமையினாலும், இன்னும் படப்பிடிப்புக்கள் முடிவடையாத நிலையிலும், தான் திருமணத்தின் பின்னர் மூன்றாவது நாளே படப்பிடிப்புக்கு செல்லவுள்ளதாக சமந்தா தெரிவித்துள்ளார்.