வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள், திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
டெல்லியில் 23-வது நாளாக போராடி வரும் விவசாயிகள், பிரதமர் தங்களுடன் பேச வேண்டும் என்றும், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்பதால் நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகி வருகிறோம் என்றும்,விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குளிர்காலம் என்பதால் அதிக கூடாரங்களை தயார் செய்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், மேலும் கூறியுள்ளனர்.