தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆலோசனைகளை நடத்தியிருந்தன.
இது தொடர்பாக கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் நேரடியாகச் சந்தித்து பேசியிருந்தனர்.
இந்தநிலையிலேயே, தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.





