மகாராஷ்டிரா- ஜல்கான் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை உபயோகித்து மெத்தை தயாரித்த நிறுவனமொன்றை காவல்துறையினர் கண்டுபிடித்து அந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மும்பையில் குசம்பா எனும் கிராமத்தில் இந்த மெத்தை தயாரிப்பு நிறுவனம் அமைந்துள்ளது.
பருத்தி மற்றும் பிற மூலப்பொருட்களை பயன்படுத்தி மெத்தைகளை தயாரிப்பதற்கு பதிலாக, பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை உபயோகித்து மெத்தைகளை தயாரித்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக மெத்தை தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
அத்துடன், மெத்தை தயாரிப்பு நிறுவனத்தின் வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த முக கவசங்களை காவல்துறையினர் கைப்பற்றி தீயிட்டு அழித்துள்ளனர்.