காங்கிரஸ் கட்சியில் இருந்து விரைவில் வெளியேறப் போவதாக பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால், முதல்வர் பதவியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், இரண்டு நாட்களுக்கு முன்னதாக டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்.
இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலையும் அவர் சந்தித்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமரீந்தர் சிங், “காங்கிரசுக்கு எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளேன். இதுவரை நான் காங்கிரசில் இருந்து விலகவில்லை.
ஆனால், விரைவில் காங்கிரசில் இருந்து விலகுவேன். அமித்ஷாவைச் சந்தித்த பின்னர் அனைவரும், நான் பா.ஜ.க வில் சேருவேனா என கேள்வி எழுப்பினர். ஆனால், நான் பா.ஜ.கவில் சேரவில்லை. ” என்று தெரிவித்துள்ளார்.